作词 : Christopher a.Raja
作曲 : Christopher a.Raja
உனக்கு என்னை
பிடிக்கும் என்று
தெரியும் கண்ணே
பொய் எதற்கு ?
யாருக்காக நடிக்கிறாய் ?
எதற்காகவோ துடிக்கிறாய் ?
வா !
இரவது காத்திருக்கு !
அதை,
நிலவொளி பார்த்திருக்கு !
இன்னும் என்ன தயக்கமோ !
பொன் நேரம் தான் நிலைக்குமோ !
எனை அணைத்திடு !
எனக்கும் உன் மேல்
விருப்பம் என்று
தெரிந்தும் வெட்கம்
ஏன் எதற்கு ?
சிக்கல் என்ன சமூகமா !
அதை சுட்டுத் தள்ளு சுமூகமா !
வா !
வியக்கும் விருந்திருக்கு !
அரை
குவளை மதுவிருக்கு !
இன்னும் என்ன தயக்கமோ !
பொன் நேரம் தான் நிலைக்குமோ !
எனை அணைத்திடு !
ஒரு புறம் ஆளும் மனிதர் குணங்கள்,
மறு புறம் வீழும் இயற்கை வளங்கள்,
நட்சத்திரமும், மத்த கருமமும்,
எல்லாம் அழிந்தே போகும் முன்னே
வா !
இன்னும் உயிரிருக்கு !
தடை
செய்தக் கனியிருக்கு !
இன்னும் என்ன தயக்கமோ !
பொன் நேரம் தான் நிலைக்குமோ ?
எனை அணைத்திடு !

热门推荐| 1 | |
|---|---|
| 2 | |
| 3 | |
| 4 | |
| 5 | |
| 6 | |
| 7 | |
| 8 | |
| 9 | |
| 10 |